செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (08:23 IST)

போலீசை சமாளிக்க நாய் வேஷமிட்டு வெளியே சென்ற மதுரை வாலிபர்: பரபரப்பு தகவல்

நாய் வேஷமிட்டு வெளியே சென்ற மதுரை வாலிபர்
கடந்த ஒரு வாரமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அத்தியாவசிய தேவைகளை முன்னிட்டு வெளியே சென்றாலும் கூட போலீசார் கெடுபிடி இருப்பதால் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் ஒருசில சேட்டை வாலிபர்கள் போலீசாரை ஏமாற்றி வெளியே சென்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் வேடம் போட்டு நான்கு கால்களில் நடந்து செல்வது போல் சாலையில் சென்றுள்ளார். அந்த நாய் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை கண்ட போலீசார் சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்தபோது அது ஒரு வாலிபர் என்பது தெரியவந்தது
 
இதனை அடுத்து அவரது விவரங்களை விசாரித்த போலீசார் இனிமேல் இதுபோன்ற செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்வதற்காக நாய் வேடம் போட்ட மதுரை வாலிபால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது