1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (11:57 IST)

நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை: ராகுல் காந்தி

rahul gandhi
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எந்த புரிதலும் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக அவருடைய விமர்சனம் கடும் தாக்குதல் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவருடைய விமர்சனம் மத்திய நிதியமைச்சர் மீது திரும்பியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை என்றும் அவர் ஜீரோ அண்டர்ஸ்டாண்டிங் நிலையில் உள்ளார் என்றும் தெரிவித்தார் 
 
அவர் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்பட்டு வருகிறார் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் என்னிடம் ஒட்டுமொத்த சிஸ்டத்தை கொடுத்தால் தேர்தலில் பாஜகவினர் எப்படி வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதை நிரூபித்து காட்டுவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.