வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (08:22 IST)

பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

nirmala
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக எதிர் கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வரும் நிலையில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் பொய் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் 
 
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய் என்றும் நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
சர்வதேச அளவிலான பிரச்சனைகள் காரணமாக தான் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இருந்தாலும் இந்தியாவில் அது போன்ற நிலை ஏற்பட பூஜ்ய சதவிகிதம் உள்ளது என்றும்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு என்பதே இல்லை என்று மத்திய நிதியமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது