தொடர்புடைய செய்திகள்
- நிர்பயா வழக்கு; ஜனவரி 22-ல் நால்வருக்கும் தூக்கு… நீதிமன்றம் உத்தரவு
- 10% இட ஒதுக்கீடு; மாநில அரசே முடிவெடுக்கலாம்..
- அதிக வயது பெண்ணை திருமணம் செய்யும் சிறாரை தண்டிக்க கூடாது; உச்சநீதிமன்றம்
- ”இதற்கெல்லாம் காங்கிரஸ் தான் காரணம்’..அமித் ஷா குற்றச்சாட்டு
- ”ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை தாக்கினர்..” மாணவர் சங்கத் தலைவர் பகீர்
”என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது”.. நிர்பயா தாயார் நெகிழ்ச்சி
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரையும் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் “எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது” என நிர்பயாவின் தாயார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த நிர்பயாவின் தாயார் “ நீதிமன்ற உத்தரவு மூலம் எனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடுவதன் மூலம் பெண்களுக்கு வலிமை கிடைக்கும்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
