திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (08:44 IST)

நாட்டை விட்டு செல்லும் முன் ராகுலை சந்தித்தாரா நீரவ் மோடி:

நாட்டைவிட்டு செல்லும் முன் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்ததாக கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில்  ராகுல் காந்தி சந்தித்ததாக சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா கூறியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த  2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி டெல்லி இம்பீரியல் ஓட்டலில் நடந்த ஒரு திருமண மது விருந்தில் ராகுல் காந்தி நீரவ் மோடியை நீண்டநேரம் சந்தித்து பேசினார். நீரவ் மோடிக்கும், அவரது உறவினர் மொகுல் சோக்சிக்கும் தவறாக கடன் வழங்கிய அதே காலகட்டத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

ராகுல் காந்தியின் பாதுகாப்பு படையினரிடம் இதற்கான ஆவணங்கள் இருக்கும். இதனை ராகுல் காந்தி மறுக்க தயாரா? அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? இதை தவறு என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று பூனாவாலா கூறியுள்ளார். ஆனாலும் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது.