திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (16:33 IST)

ராகுல் லண்டன் சென்றது விஜய்மல்லையாவை சந்திக்கத்தானா? பாஜக சந்தேகம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் லண்டனுக்கு சென்று திரும்பினார். அவர் நாடு திரும்பிய ஒருசில நாட்களில்தான் 'இந்தியாவை விட்டு வெளியேறும் முன்னர் தான் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா கூறியிருந்தார். இதனால் ராகுல் லண்டன் சென்றதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமா? என பாஜக சந்தேகம் அடைந்துள்ளது.

ராகுல்காந்தி லண்டன் சென்றுவந்த பிறகே இந்த பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளதால், விஜய்மல்லையாவுடன் கூட்டு வைத்துக் கொண்டு ராகுல் செயல்படுகிறாரா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கோவாவில் விஜய்மல்லையாவின் விருந்தில் கலந்து கொண்டவ்ர்கள் யார் யார்? வெளிநாட்டில் அவரது விருந்தினராக இருப்பது யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், வெளிநாடு தப்பிச் சென்றவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரை பிரதமர் மோடி இந்தியா கொண்டுவருவார் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.