காங்கிரஸில் இருந்து முன்னாள் முதல்வர் விலகல்: ராகுல்காந்தி அதிர்ச்சி

Last Modified வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (08:33 IST)
மேகாலயா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.டி.லபாங் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளதால கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முன்னாள் மேகாலயா முதல்வர் லபாங் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தனது வயது மற்றும் உடல் நிலை காரணமாகவும் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த லபாங், அந்த கட்சியில் இருந்து விலகியது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சியில் சேருவார் என்ற வதந்தியும் நிலவி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :