1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (13:33 IST)

3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய நீடா அம்பானி

nita ambani
நீட்டா அம்பானியின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி அன்னதானம் வழங்கினார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி மற்றும் தொழிலதிபர் நீடா அம்பானி   நேற்று தன் 60 வது பிறந்தநாள் கொண்டாடினார்.

இதே நாளில்   இந்தியாவில் மிகப்பெரிய மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசா  திறக்கப்பட்டது.  இதன் துவக்க விழாவில், அம்பானி குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நீட்டா அம்பானியின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி அன்னதானம் வழங்கினார்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.