செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (18:50 IST)

முகேஷ் அம்பானிக்கு கொலைமிரட்டல்…ரூ.400 கோடி கேட்ட நபர்

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம்  கொலைமிரட்டல் விடுத்து ரூ.400 கோடி கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு ஒரே வாரத்தில் 3 வது முறையாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அனுப்பிய இமெயிலில்  முகேஷ் அம்பானியை மிரட்டியதுடன், போலீஸாரால் என்னை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்னைக் கைது செய்ய முடியாது. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட இமெயிலும்  இதே முகவரில் இருந்து வந்துள்ளது.

முதலில் ரூ.20 கோடி கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இமெயிலில் ரூ.200 கோடியும், 3 வது முறையாக வந்த இமெயில் ரூ.400 கோடி கேட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மும்பை போலீஸார் மின்னஞ்சல்களில் இன்டர்நெட் புரோட்டோகால் முகவரிகை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக போலீஸார் பெல்ஜிய விர்ச்சுவல் பிரெய்வேட்     நெட்வொர்க் என்ற நிறுவனத்திடம் உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகிறது.