செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (11:07 IST)

சிம்கார்டு வாங்க புதிய விதிகள்: டிசம்பர் 1 முதல் அமல் என அறிவிப்பு..!

சிம்கார்டு வாங்க புதிய விதிகள் டிசம்பர் 1 முதல் அமல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி சிம்கார்டு வாங்குபவர்களுக்கு கேஒய்சி  விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய சிம்கார்டு பயனர்களுக்கு மட்டுமின்றி ஏற்கனவே உள்ள சிம் கார்டுக்கு பதில் புதிய கார்டு வாங்கினாலும் இந்த நடைமுறை பொருந்தும்.  

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக மொத்தமாக சிம் கார்டுகளை வாங்கினால், நிறுவனத்தின் பொறுப்பாளர் உரிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட்டால் மட்டுமே மொத்தமாக சிம்கார்டுகள் கிடைக்கும்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு நபர் தனது அடையாள அட்டையை பயன்படுத்தி 9 சிம் கார்டுகளை வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் இல்லை.

 சிம் கார்டு விற்பனை செய்வோரிடம்,  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.  

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களிடம் இருந்து சிம் கார்டுகளை வாங்கி விற்பனை செய்யும் முகவர்கள்,  விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் தொடர்பான விவரங்களை முழுமையாக பெற வேண்டும்.

Edited by Mahendran