வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:15 IST)

' மீனவர் நல மாநாட்டில்' முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

Stalin
ராமநாதபுரம்  மாவட்டம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து   நேற்று மாலையில்  முகவர்கள் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த    திமுக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில்,  கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்  மீனவர்களுக்கு 10  முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

அதில்,  ‘’தமிழக மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5035  பேருக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும். 

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மானிய விலையில் வழங்கப்படும் டீசல், விசை படகுகளுக்கு 19000 லிட்டர், நாட்டுப் படகுகளுக்கு 4400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

மீனவர்களுக்கு  வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அலகு தொகை ரூ. 1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய  மாவட்டங்களைச் சேர்ந்த  பதிவு  செய்யப்பட்ட  நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.  1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்தில்  இயந்திரங்கள் அளிக்கப்படும் ‘’என்று  10 தெரிவித்துள்ளார்.