வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (14:40 IST)

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யும் பிரபலங்களுக்கு கட்டுப்பாடு: மத்திய் அரசு அதிரடி..!

social network
நடிகர் நடிகைகள் உள்பட சமூக வலைதளங்களில் பல பிரபலங்கள் விளம்பரம் செய்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசு இது குறித்து முக்கிய கட்டுப்பாடு ஒன்றை விரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துகிறது 
 
ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கில் கோடி கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பிரபலங்கள் பலர் பொருள்களை விளம்பரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறித்து விசாரிக்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்ட விளம்பரம் ஸ்பான்சர் செய்யப்பட்டதா பணம் வாங்கி பரிந்துரை செய்யப்படுகிறதா என்பதை தெளிவாக எழுத்து வடிவில் குறிப்பிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும் பிரபலங்களுக்கு மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகம் திடீர் கட்டுப்பாடு வைத்துள்ளது. இந்த கட்டுப்பாடு காரணமாக பிரபலங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran