திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:33 IST)

உகாண்டாவில் 12 மனைவிகள், 102குழந்தைகள்,568 பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நபர்!

Uganda
உகாண்டா நாட்டில் 12 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் நபருக்கு 102 குழந்தைகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சிரிய நாடு உகாண்டா. இங்குள்ள  புரலேஜா என்ற மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தில் வசிப்பவர் மூசா ஹசஹ்யா. இவருக்கு வயது 68 வயது.

இவருக்கு 12 மனைவிகளும், 120 குழந்தைகளும், 578 பேரக்குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.

இதில், இவரது முதல் மற்றும் கடைசிக் குழந்தையின் பெயர் மட்டும்தான் தெரியும் என்று கூறும் மூசா ஹசஹ்யா, அனைத்துக் குழந்தைகளைக் காண தாய்மார்கள் தான் உதவுவதாக கூறியுள்ளார்.

மேலும், உடல் நிலை சரியில்லாமல் உள்ளதால் அவரது இரண்டு ஏக்கர்  நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மனைவி, குழந்தைகளின் உணவு, கல்வி, உடை உள்ளிட்ட அத்தியாவசிய வதிகள் செய்ய முடியவில்லை என்பதால் குடும்பம் மேலும் விரிவடையாமல் இருக்க மனைவிகளுக்கு கருத்தடை செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.