வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (08:27 IST)

தனிமைப்படுத்தலுக்கு சம்மதிக்காக பயணிகள் – ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு!

சிறப்பு ரயில்களில் வரும் பயணிகள் தங்களை கொரோனா சோதனைக்காக தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்ததால் ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் அறிவிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து கிளம்பிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பேருடன் சென்னைக்கு சில தினங்களுக்கு முன் வந்து சேர்ந்துள்ளது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.

ஆனால் சமீபத்தில் இது போல பெங்களூர் வந்த 100 க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள சம்மதிக்க மறுத்தனர். மேலும் தங்களிடம் இதுபற்றி ஏன் முன்பே சொல்லவில்லை என தகராறு செய்தனர். அதனால் அவர்கள் அனைவரும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் சர்ச்சைகளைக் கிளப்பியதால் இப்போது ஆர் சி டி சி தனிமைப்படுத்தலுக்கு சம்மதிப்பவர்களை மட்டுமே ரயில் பயணத்துக்கு அனுமதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனையை ஒத்துக்கொண்டால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.