வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 மே 2020 (18:45 IST)

தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது 
 
இந்நிலையில் நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைதால், நாடு முழுவதும் இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
இதன்படி நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் நாடு முழுவதும் பச்சை மற்றும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலத்துக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது