திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 18 மே 2020 (07:53 IST)

கொரோனா மோட்டிவேஷனல்: குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தும் மருத்துவர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. குறிப்பாக முதல் சிங்கிளான "குட்டி ஸ்டோரி" பாடல் வித்யாசமான மோட்டிவேஷனல் பாடலாக இருந்ததால் வயது வரம்பின்றி அனைவரையும் கவர்ந்தது.

இந்த பாடலுக்கு டிக்டாக்கில் அமோகா வரவேற்பு உள்ளது. தற்போது 55 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலுக்கு 100 மருத்துவர்கள் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உயிரை கொள்ளும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் தெய்வமாக பார்க்கப்படும் மருத்துவர்கள்  பணி செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மோட்டிவேஷனல்` பாடலுக்கு நடனமாடியிருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. மருத்துவர்களின் இந்த நடனத்திற்கு நடிகை குஷ்பூ, சுஹாசினி, ராதிகா, நடிகர் மாதவன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.