வியாழன், 16 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 பிப்ரவரி 2026 (14:20 IST)

நீட் தேர்வு தேதி அறிவிப்பு: விண்ணப்பம் எப்போது முதல் கிடைக்கும்?

நீட் தேர்வு தேதி அறிவிப்பு: விண்ணப்பம் எப்போது முதல் கிடைக்கும்?
NEET-UG 2026 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மார்ச் 8 வரை விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் neet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
 
இந்தத் தேர்வு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறும். விண்ணப்பிக்க கடைசித் தேதி மற்றும் கட்டண விபரங்களை இணையதளத்தில் பார்த்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். 
 
விண்ணப்பம் செய்யும் போது தேவையான ஆவணங்களான புகைப்படங்கள், கைரேகை மற்றும் கல்விச் சான்றிதழ்களைத் தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எவ்வித தவறும் இன்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
மருத்துவ கனவுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
 
Edited by Siva