திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2026 (15:12 IST)

தூக்கில் தொங்குவது போல ரீல்ஸ்!.. உயிரை இழந்த 27 வயது பெண்!...

women
இப்போது எல்லோரின் கையிலும் செல்போன் இருக்கிறது. அதேபோல் ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது.. ஏனெனில் மிகவும் குறுகிய நேரத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் சுவாரஸ்த்தை கொடுப்பதால் அதைப்பார்க்கும் ஆர்வம் பலருக்கும் அதிகரித்திருக்கிறது.

இப்படி சில வீடியோக்கள் வைரலாகி பல லட்சம் பேர் பார்ப்பதால் பலருக்கும் ரீல்ஸ் வீடியோக்களை தங்களின் யுடியூப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடும் ஆர்வம் உருவாகியிருக்கிறது. ரீல்ஸ் மோகத்தில் உயிரையும் மதிக்காமல் சிலர் ஆபத்தான காரியங்களிலும் ஈடுபடுவது உண்டு. தண்டவாளத்தில் போய் ரயில் வரும்போது கீழே படுத்துக் கொள்வது, ரயில் அருகில் வரும்போது நகர்ந்து விடுவது போன்ற பல ஆபத்தான விஷயங்களை பதிவு செய்து ரில்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான், தூக்கில் நடிப்பது போல ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பண்டா மாநிலத்தில் வசித்த 27 வயது பெண் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார்..

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கில் தொங்குது போல ரில்ஸ் வீடியோ எடுக்க நினைத்தார். எனவே, அறையில் கேமராவை ஆன் செய்து செல்போனை ஓரிடத்தில் வைத்துவிட்டு துணியை மேலே கட்டி தூக்கில் தொங்குவது போல கழுத்தில் துணியை மாட்டியிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக உண்மையிலேயே துணி அவரின் கழுத்தை இறுக்கி விட்டது. தப்பிக்க முயற்சி செய்தும் முடியவில்லை..

இதில் உண்மையிலேயே அவர் தூக்கில் தொங்கி மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டார்.  இந்த பெண்ணுக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். சிறிது நேரம் கழித்து அவரின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்து போதுதான் அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரக்ள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்..