தொடர்புடைய செய்திகள்
- ஜேஇஇ , நீட் நுழைவுத் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும்: மத்திய அரசு
- 2025 ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு.. தேதி அறிவிப்பு..!
- ஐஐடி நுழைவுத் தேர்வு: ஜேஇஇ முடிவுகள் வெளியீடு.. எந்த இணையத்தில் பார்க்கலாம்?
- ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு.. மாணவர்களின் சந்தேகங்களுக்கு மொபைல் எண் அறிவிப்பு
- பஞ்சாப் முதல்வராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? கேள்விக்கு இதுதான் விடை..!
ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?
ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்ப திருத்தத்துக்கு jeemain.nta.nic.in இணையதளத்தை பயன்படுத்தலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு nta.ac.in அல்லது 011-40759000/69227700 என்ற தொலைபேசிகள் மற்றும் [email protected] மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம்.
ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு விண்ணப்பத் திருத்தம் குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ:
விண்ணப்பத் திருத்த காலம்: பிப்ரவரி 27, 28 (jeemain.nta.nic.in)
தேர்வு தேதி: ஏப்ரல் 1 - 8
விண்ணப்ப திருத்தம்: ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே திருத்தம் செய்யலாம்
ஹால்டிக்கெட்: பின்னர் வெளியிடப்படும்
கூடுதல் தகவல்: nta.ac.in
தொடர்பு: 011-40759000 / 69227700, [email protected]
Edited by Mahendran
