ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (09:59 IST)

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

நீட் மருத்துவ தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாகவும் மாற்றப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் நீட் மறு தேர்வுக்கான முடிவுகளை மறுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் மறுதேர்வை 750 மாணவர்கள் மட்டுமே எழுதினர் என்றும் மீதமுள்ள மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்காதது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran