1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (16:46 IST)

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

New Parliament
நீட் தேர்வு குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில்  தொடர் அமளி செய்ததை அடுத்து மாநிலங்களவையில் இருந்து  எதிர்கட்சிகள் எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மட்டுமே குரல் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் இந்த தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நீட் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நீட் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து மாநிலங்களிலிருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்
 
ஏற்கனவே மக்களவையிலும் நீட் தேர்வு குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டதால் திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது தெரிந்தது
 
Edited by Mahendran