1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (12:56 IST)

முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பா?

Mbbs pg neet
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18-ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்நிலையில் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாதம் 18ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக, RTI கேள்விக்கு சுகாதார அமைச்சகம் பதிலளித்துள்ளது 
 
மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு  http://natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran