1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (16:47 IST)

அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தடை இல்லை: முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

ama prasad
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவரது முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
முன்னதாக பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருப்பதாக கூறப்படு கிறது.  அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா ஆகியோர் ஆண்டாள் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது சகோதரியையும் தாக்கியதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்நிலையில் குஜராத் மும்பை ஆகிய பகுதிகளில் அமர் பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran