வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (15:18 IST)

பாஜக கூட்டணிக்கு வரும் இன்னொரு பெரிய கட்சி.. 400ஐ தாண்டிவிடுமா?

naveen patnaik
கடந்த 15 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்ட ஒரிசாவில் பிஜு ஜனதா தள கட்சி இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 
தனது கட்சி தலைவர்களுடன் பாஜகவுடன் கூட்டணியில் இணையலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் இணைவதென்றால் தொகுதிகள் ஒதுக்குவது குறித்து என்ன முடிவு செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

ஒடிசாவில் பாஜக மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜு  ஜனதா ஜன கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அனைத்து தொகுதிகளையும் இந்த கூட்டணி வெற்றி பெற்று விடும் என்று கணிக்கப்படுகிறது

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிஜூ ஜனதா தளம் அதன் பின் தொடர்ச்சியாக தனித்து போட்டியிட்டு வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்றது என்பதும் 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

தனித்தனியாகவே இரு கட்சிகளும் 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை கூட்டணி சேர்ந்தால் 21 தொகுதிகளையும் கைப்பற்றி விடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே ரீதியில் சென்றால் பாஜக கூட்டணி 400ஐ தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran