ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (07:10 IST)

ஒரே ஒரு அமலாக்கத்துறை ரெய்டு.. திரிணாமுல் காங்கிரஸ் இருந்து பாஜகவுக்கு தாவிய அரசியல்வாதி..!

ஒரே ஒரு ரெய்டு காரணமாக பிரபல அரசியல்வாதி ஒருவர் பாஜகவில் இணைந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவராக இருந்தவர் தபஸ் ராய். இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது தனக்கு ஆதரவாக கட்சி தலைமை நிற்கவில்லை என்று கடும் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இவர் திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் திடீரென நேற்று அவர் பாஜகவில் தானே இணைத்துக் கொண்டார்/ திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் போராடவே பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்

ஒரே ஒரு அமலாக்கத்துறை ரெய்டுக்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பாஜகவில் இணைந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva