1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (21:15 IST)

நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர்

isro
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3 விண்கலத்தை  நிலவுக்கு அனுப்பிய நிலையில்,  விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத்  நிலவில் தரையிறங்கியது.

சந்திரயான் 3 விண்கலத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்த லேண்டர்  சமீபத்தில்   நிலவில் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து ரோவரும் தனியே பிரிந்து வெளியே வந்தது.

'’விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகவும், திட்டமிட்டது மாதிரி ரோவரின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டதாகவும், ரோவரின் உந்துவிசை, லேண்டரின்  தொகுதிகள் இயல்பாக செயல்பட்டு வருவதாக’’ இஸ்ரோ  அறிவித்தது.

இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதைக் கண்டுபிடித்த பிரக்யான் ரோவர் நிலவின் ஆக்சிஜன் இருபதை உறுதி செய்துள்ளதாக  தற்போது இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நிலவின் தென்துருவத்தில் சல்பர், அலுமியம், கால்சியம் உள்ளிட்ட பல தனிமங்கள் இருப்பதை பிரக்யான் உறுதி செய்துள்ளதாகவும், ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருவதாகவும்  இஸ்ரோ கூறியுள்ளது.

ரோவரில்  பொருத்தப்பட்டுள்ள லேசர் இண்டியூஸுட் பிரேக் டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் என்ற கருவி நிலவில் தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.