ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (15:14 IST)

லாரியை திருடிய திருடனுக்கு ஜாமீன்! வெளியே வந்து மீண்டும் அதே லாரி அபேஸ்!

நாக்பூரில் லாரி திருடியதற்காக சிறை சென்ற திருடன் ஒருவன் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே லாரியை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் சில நாட்களுக்கு முன்னதாக தனது குடவுனில் நின்றிருந்த லாரி திருடு போனதாக லாரி உரிமையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் லகாட்கன் என்ற பகுதியில் லாரியுடன் தப்பி சென்ற சஞ்சை தோன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த சஞ்சை தோனுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. ஜாமீன் கிடைத்து வெளியே வந்த சஞ்சை மீண்டும் காவல் நிலையம் சென்று அங்கு நிறுத்தி வைத்திருந்த லாரியை கடத்திக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து கூடுதல் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பிய சஞ்சையையும், லாரியையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாக்பூரில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.