இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு? – நிபுணர் குழு எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் மெல்ல குறைந்து வந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. கடந்த மாதம் வரை நாள் ஒன்றுக்கு 90 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது 50 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர் குழு கூறியுள்ளது.
மேலும் தற்போது இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 30% பேருக்கு கொரோனா இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரியில் இது 50% ஆக அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பாதிப்புகளுக்கு ஊரடங்கு விதிக்க தேவையில்லை என்றும், முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே கொரோனா பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.