வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (10:14 IST)

செங்கல்பட்டு டோல்கேட் கலவரம்: ஊழியர்களே பணத்தை திருடியது அம்பலம்!

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் ஊழியர்களே பணத்தை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கசாவடியில் பொதுமக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் தற்போது அந்த சுங்கச்சாவடி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலவரத்தின்போது சுங்கச்சாவடியில் இருந்த 18 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஒரு நபர் உள்ளே புகுந்து பணத்தை அள்ளி பையில் போட்டுக்கொண்டு ஓடுவது தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சுங்கச்சாவடியில் பணிபுரிந்தவர்களே அந்த பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் மற்றும் பரமசிவம் என்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.