புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:28 IST)

4வது நாளாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை தொடர்ச்சியாக சரிவை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நல்ல வருமானம் கிடைத்ததை அடுத்து லாபத்தை எடுப்பதற்காக உயர்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் பெருமளவு விற்றதால் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 455 புள்ளிகள் சரிந்து 50 ஆயிரத்து 889 என்ற அளவில் முடிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 137 புள்ளிகள் சரிந்து 14971 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது