1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Share Market nearly 500 points hike today

மீண்டும் 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

பங்குச்சந்தை
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பட்ஜெட்டுக்கு பின்னர் பங்குச் சந்தையின் உயர்வு அபரிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் பங்குச் சந்தை சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் 510 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 52 ஆயிரத்து 53 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் நிப்டி 130 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 794 என்ற அளவில் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை உயரும் என்று கருதப்படுவதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
அடுத்த கட்டுரையில்
வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இன்றைய நிலவரம்!