ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (18:42 IST)

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்: மும்பையை மூழ்கடித்த மழை

மும்பையில் இரண்டு நாட்களில் பெய்த அதிகபடியான மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் மழை எப்போது வரும் என ஊரே எதிர்பார்த்து நிற்க, இன்னொரு பக்கம் மழை எப்போ நிக்கும் என எதிர்பார்க்கும் அளவு வெளுத்துவாங்கி கொண்டு இருக்கிறது. மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரமெங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகள் ஆறுபோல் காட்சியளிக்கின்றன. மும்பையில் உள்ள சுரங்கபாதைகள் மழையால் மூழ்கிவிட்டன. அதனால் மக்கள் அந்த பக்கம் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரங்க பாதையின் அருகே கார்களை வெள்ள நீர் இழுத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.