வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (15:57 IST)

விமானத்தின் என்ஜினை பதம் பார்த்த பறவை: நடந்தது என்ன??

அரியானா மாநிலத்தில் விமானப் படை விமானம் மீது பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது.

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதில், விமானத்தின் என்ஜின் பழுதடைந்து செயலிழந்தது. உடனே சுதாரித்து கொண்ட விமானி, அம்பாலா விமானப் படைத் தளத்தில் விமானத்தை தரையிறக்கினார்.

என்ஜின் செயலிழந்ததால் தரையிறங்கும் போது விமானத்தின் பாரத்தை குறைப்பதற்காக, விமானத்தின் சில எரிபொருள் டேங்க் மற்றும் சில குண்டுகளையும் கீழே வீச வேண்டிய நிலை வந்தது.

ஆதலால் விமானத்தின் சில பொருட்கள், பால்தேவ் நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளின்  கூரைகளின் மீது விழுந்தது.

இதே போல், கடந்த ஜனவரி மாதம் உத்திரப்பிரதேசத்தில் ஜாக்குவார் விமானம் என்ஜின் பழுதடைந்து, தரைபகுதியில் பத்திரமாக இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.