ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (13:53 IST)

சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி... நாயுடுவை நடுத்தெருவில் நிற்கவைக்காமல் விடமாட்டர் போல ஜெகன் மோகன்

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி, அதனை காலி செய்யுமாறு ஜெகன் மோகன் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில், ஜெகன் மோகன் தலைமியிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, முக்கியமான, பயனுள்ள பல திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் அதனை உடனடியாக செயல்படுத்தியும் வருகிறார்.

ஆனால் அதே வேளையில், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தூக்கத்தை கெடுக்கும் வகையில், அவரின் பயங்கரமான கனவாகவும் ஜெகன் மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு ஆட்சின் காலத்தில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடித்து தள்ளினார். அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவின் ’இசட்’ பிரிவு பாதுகாப்பை ரத்து செய்தார்.

அதன் பின்பு சந்திரபாபு நாயுடு மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை, ஜெகன் மோகன் அடுக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது சந்திரபாபு நாயுடு தங்கி வருகிற கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள வீட்டை காலி செய்யுமாறு ஜெகன் மோகன் ரெட்டி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை குறித்து அரசு வெளியிட்டிருக்கும் தகவலில், கிருஷ்ணா நதிகரையிலிருந்து 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதம் என்றும், அவ்வாறு கட்டப்பட்டிருக்கும் 28 வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவ்வாறு சந்திரபாபு நாயுடு மேல், ஜெகன் மோகன் அரசு பல தாக்குதல்களை தொடுத்து கொண்டிருப்பதால், தெலுங்கு தேச கட்சியின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் மாநில அரசின் மீது பெரும் கொந்தளிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.