புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (18:43 IST)

இனி 50 பைசா நாணயங்கள் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

50 பைசா உள்ளிட்ட நாணயங்களை பரிமாற்றத்தின் போது பெற்றுகொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நாணயங்களை அந்தந்த காலத்திற்கு ஏற்ப வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது, 50 பைசா, ரூ.1, 2, 10 ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ரூ.10 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது என வதந்தி கிளம்பியதால், இந்தியாவில் பலர் வாங்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன் படி, புதிய வடிவங்களில் நாணயங்கள் வெளியிடும்போது அதன் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும், ஆதலால் வியாபாரிகள், மக்களிடம் புதிய நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டபடி செல்லும் எனவும், இனிமேலும் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.