மாஸ்க் அணியாதவர்களுக்கு மும்பை மாநகராட்சி நூதன தண்டனை!
மும்பை மாநகராட்சியில் மாஸ்க் அணியாதவர்கள் தெருவை சுத்தம் செய்ய வேண்டுமென்ற நூதன தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக மாஸ்க் என்பது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இன்றியமையாத பொருளாக மாறியுள்ளது. இதனால் பல நாடுகளும் மக்களை மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பொதுமக்களில் ஒரு சிலர் அதை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
இதனால் பல நூதனமான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மும்பை மாநகராட்சி நூதன தெருவை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது 200 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது.