எப்பா.. செலக்‌ஷன் டீம்.. நம்ம பாஸூ ஆட்டத்தை பாத்தீங்களா? – சூர்யகுமாருக்கு வலுக்கும் ஆதரவு!

Suryakumar Yadav
Prasanth Karthick|
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில் சூர்யகுமாரின் ஆட்டம் பரவலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலாவதாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி பவர் ஓவருக்கு பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும் நின்று விளையாடிய தேவதத் படிக்கல் 45 ரன்களுக்கு 74 ரன்கள் விளாசி அணியின் ரன்ரேட்டை 164 ஆக மாற்றினார்.

இந்நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி பவர் ஓவரில் டி காக், கிஷனை இழந்தது பெரும் பலவீனமாக பார்க்கப்பட்டது. பின்னதாக களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் கடைசி வரை தோற்காமல் நின்று விளையாடி 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் விளாசி 79 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரின் முதல் பந்தை அடிக்கும் முன்னதாக அணியின் ரன் ரேட் 162 ஆக இருந்தது. அப்போது தன் அணியினரை பார்த்து “நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம்” என சைகை காட்டிவிட்டு ஒரு பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

சூர்ய குமார் யாதவை ஐபிஎல் தவிர்த்து இண்டர்நேஷனல் போட்டிகளுக்கு பிசிசிஐ தேர்ந்தெடுக்காமல் இருப்பது பெரும் குறையாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யகுமாரின் இந்த அசாத்திய ஆட்டமும், வெற்றியின் போது அவர் கை காட்டியதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :