செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (14:39 IST)

ஒரு மாத காலத்திற்கு ட்ரோன் பறக்கவிட தடை! – மும்பை போலீஸ் அதிரடி உத்தரவ

ஒரு மாத காலத்திற்கு ட்ரோன் பறக்கவிட தடை! – மும்பை போலீஸ் அதிரடி உத்தரவ
இந்தியாவில் விழாக்காலம் தொடங்கவுள்ள நிலையில் மும்பை பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் எதிர்வரும் மாதத்தில் தீபாவளி, மும்பை தாக்குதல் தினம் ஆகியவை நடைபெற உள்ளன. இதனால் மும்பை முழுவதும் போலீஸ் பலத்த காவல் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பை நகரப்பகுதிகளில் ரிமோட்டால் ஆப்ரேட் செய்யப்படும் ட்ரோன்கள் பறக்கவிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இந்த தடை அமலில் இருக்கும் என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.