திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (17:06 IST)

ராஜிமானா செய்த முகேஷ் அம்பானி; ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி!!

ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். 

 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ஜூன் 27 ராஜினாமா செய்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர்கள் குழு  கூட்டம் 27 ஜூன், 2022 அன்று நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
முகேஷ் அம்பானி ராஜினாமா செய்ததால், நிர்வாகமற்ற இயக்குநரும் அம்பானியின் மகனுமான ஆகாஷ் அம்பானியை வாரியத்தின் தலைவராக நியமித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கஜ் மோகன் பவார் ஜூன் 27 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கிறார்.
 
முன்னதாக 2021 ஆம் ஆண்டு, தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக தனது குழந்தைகள் அதிக பொறுப்புகளை எடுத்துக்கொள்வதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ரிலையன்ஸின் நிறுவனரான தனது தந்தை திருபாய் அம்பானியின் அதே தீப்பொறியையும் ஆற்றலையும் தனது குழந்தைகளிடமும் காண முடியும் என்று அவர் கூறினார்.
 
2019-ல் நிறுவப்பட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், RIL க்கு முழு உரிமையாளராக உள்ளது. இது ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனமாகும்.