திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (16:40 IST)

விலை உயர்ந்த காரை வாங்கிய முகேஷ் அம்பானி !

ரூ. 13 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார்  தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இதன் தலைவர் உலகில் மிகப்பெரிய கோடீஸ்வர்களில் ஒருவராக உள்ளார். மும்பையிலுள்ள இவரது அண்டிலா வீடு தான் உலகில் அதிக மதிப்புள்ள வீடாக முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில்  கடந்த 2018 ஆம் ஆண்டு  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட கல்லினன் என்ற காரின் அடிப்படை விலை ரூ.6 கோடியே 95 லட்சம் ரூபாய். எஸ்.யூ.வி தோற்றம் கொண்ட இக்காரை தேவையான வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்ததால் இதன் விலை ரூ.13 கோடி ஆகும். மேலும், இக்காரின் இறக்குமதி வரியாக ரூ.20 லட்சமும், சாலைப்பாதுகாப்பு வரியாக ரூ.40 ஆயிரமும் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.  மேலும், இக்காரிற்கு 0001 என்ற பதிவெண்ணைப் பெற ரூ.12 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.