திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (09:04 IST)

முகேஷ் அம்பானி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து சிலர் விசாரித்ததாகவும் இதுகுறித்து கார் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிக்கு முகேஷ் அம்பானியின் வீடு எங்கிருக்கிறது என சிலர் கேட்டு விசாரணை செய்ததாக தகவல் வெளிவந்ததை அடுத்து இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
 
மேலும் அவ்வாறு விசாரணை செய்தவர்களின் கையில் ஒரு பை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது