1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Surges Again: Nears ₹66,000 Per Sovereign

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 66,000 ரூபாயை மீண்டும் நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தங்கம் விலை ஒரு கிராம் 40 ரூபாய் மற்றும் ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,235 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து  ரூபாய்  65,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,983 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,864 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 111.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  111,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!