திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (15:05 IST)

முகேஷ் அம்பானி மகளுக்கு முக்கிய பதவி கொடுத்த அமெரிக்கா!

முகேஷ் அம்பானி மகளுக்கு முக்கிய பதவி கொடுத்த அமெரிக்கா!
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகளுக்கு அமெரிக்கா முக்கிய பதவி ஒன்றை அளித்துள்ளது.
 
அமெரிக்காவின் தேசிய கலை அருங்காட்சியகம் என கூறப்படும் பெருமை மிகுந்த ஸ்மித்சோனியன் என்ற அருங்காட்சியகத்திற்கு 17 பேர் கொண்ட வாரிய உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது 
 
இந்த குழுவில் அமெரிக்காவின் துணை அதிபர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 17 பேர் அங்கம் வகிக்கும் நிலையில் இந்த 17 பேர்களில் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
2021, செப்டம்பர் 23ஆம் தேதி முதல் இந்த பதவி காலம் தொடங்குவதாகவும் அக்டோபர் 2023 வரை இந்த பதவி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் நிர்வாக குழு உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மகள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது