1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Indian Stock Market Trends: Gains and Declines

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரமும் இந்த வாரமும் ஏற்றத்தில் இருந்த நிலையில், நேற்று திடீரென சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 336 புள்ளிகள் உயர்ந்து 77,631 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 23,582 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் விப்ரோ, டைட்டான், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, இண்டஸ் இன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
அதேபோல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக்னாலஜி, டாக்டர் ரெட்டி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!