குழந்தையை விற்க முயன்ற தாய் – நெஞ்சை உறையவைக்கும் சம்பவம் !

Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:42 IST)
தெலங்கானா மாநிலத்தில் பொது இடமான பேருந்து நிலையத்தில் தனது 7 மாத குழந்தை ஒன்றை விற்க தாய் ஒருவர் முயன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜெனகாமா மாவட்டத்தில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு 7 மாதக் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இன்று காலை வாரங்கல் பேருந்து நிலையத்தில் அந்தப் பெண் தனது குழந்தையை விற்க முயன்றதாகப் போலிஸாருக்குப் புகார் வர அங்கு சென்ற போலிஸார் அவரிடம் இருந்து குழந்தையைக் கைப்பற்றி குழந்தைகள் காப்பக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது கணவருக்கும் அவருக்கும் நடந்த சண்டையால் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து குழந்தையை விற்க முயன்ற குற்றத்திற்காக அவரைப் போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக செய்தது.


இதில் மேலும் படிக்கவும் :