தொடர்புடைய செய்திகள்
- என் வாழ்வில் இப்படி ஒரு வேதனையை பார்க்கவில்லை! – குஜராத் விபத்து குறித்து பிரதமர் உருக்கம்!
- குஜராத் தொங்கு பால விபத்து; 140 பேர் பலி! – மு.க.ஸ்டாலின் இரங்கல்!
- பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை...குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்
- நடிகை ஜெசிகா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!
- பிரபல நடிகை தற்கொலை... சிசிடிவி வீடியோ வெளியீடு! ரசிகர்கள் அதிர்ச்சி
தொங்கு பாலம் விழுந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!
குஜராத் மாநிலம் மோர்பில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினர், ராணுவம் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. தற்போது பாலம் அறுந்து விழுந்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பாலத்தை ஆட்டியதால் மொத்தமாக அறுந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாலம் புணரமைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் முன்னே மக்கள் பயணிக்க பாலம் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited By Prasanth.K
CCTV footage of moment before #Morbi bridge collapse. Deeply painful!
