வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By BALA
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (08:11 IST)

கும்பமேளா அழகி மோனலிசாவின் ஆசை இதுதானாம்!.. குவியும் பாராட்டு!...

monalisa
மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோனலிசா. இது அவரின் உண்மையான பெயர் இல்லை.. இவர் கடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தார். அவரின் முகமும், கண்களும் பலரையும் வசீகரிக்க யுடியூபர் ஒருவர் அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அந்த வீடியோ வைரலாகி பலரிடமும் பிரபலமானார்..

இவருக்கு ரசிகர்கள் ‘மோனலிசா போஸ்லே’ என பெயர் வைத்தார்கள். வட இந்தியாவில் மிகவும் பிரபலமானதால் இவரை வைத்து சினிமா எடுக்கவும் சிலர் முன் வந்தார்கள். எனவே மும்பைக்கு சென்ற மோனலிசா சினிமாவுக்கு ஏற்றார் போல் தன்னை மாடர்னாக மாற்றிக்கொண்டார்.

அதோடு நகைக்கடை திறப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் மோனலிசா கலந்து கொள்கிறார். பாலிவுட் சினிமா வாய்ப்பு மோனலிசாவின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. தற்போது ஒரு ஹிந்தி மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘கும்பமேளா எனது வாழ்க்கையை மாற்றி நான் இந்த நிலைக்கு வருவேன் என நான் எதிர்பார்க்க இல்லை.. திடீரென புகழ் கிடைத்தாலும் நான் பொறுப்புடன் செயல்படுகிறேன்..

என்னை கொண்டாடிய இந்த சமூகத்திற்கு நல்லது செய்ய விரும்புகிறேன்.. சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து எனது சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட விரும்புகிறேன்.. என் முதல் பட சம்பளத்தை வைத்து அதற்கான வேலையை துவங்கவுள்ளேன். ஏனெனில் கல்வி மூலம்தான் பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் என நான் நம்புகிறேன்.. எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவிடப் போகிறேன்’ எனவும் அவர் கூறியிருக்கிறார். அவரின் இந்த பேச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள்.