Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (10:36 IST)
ஆதார் முறைகேடு: பாதுகாப்பது எப்படி??
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருடைய கருவிழிகள், முகம், கைவிரல் ரேகை போன்றவை ஸ்கேன் செய்யப்படும்.
இது பயோமெட்ரிக் என்றும் அழைக்கப்படுகிறது. பயங்கரவாதம், ஆள் மாறாட்டம் மற்றும் மோசடி நபர்களின் விவரங்களையும் கண்டறிய இந்தப் பயோமெட்ரிக் தரவுகள் உதவும்.
ஆனால், ஆதார் தரவுகள் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது உண்மை என்றே கூறப்படுகிறது. பிஓஎஸ் இயந்திரத்தில் பயோமெட்ரிக் தரவை உள்ளிடும் போது அதைச் சேமித்து வைத்து முறைகேடாகப் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரியவந்துள்ளது. எனவே ஆதார் பயோமெட்ரிக் தரவை லாக் செய்வது அவசியமானது.
பயோமெட்ரிக் தரவை லாக் செய்வது எப்படி?
# ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்து https://resident.uidai.gov.in/biometric-lock 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
# பின்னர் ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெற கிளிக் செய்ய வேண்டும்.
# பின்னர் ஆதார் அட்டையுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும்.
# இப்படி உறுதி செய்த உடன் ஆதார் கார்டு லாக் செய்யப்படும்.