புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (12:05 IST)

மோகன்லாலுக்கு கொக்கி போட்ட பாஜக: அஜித் ஸ்டைலில் செம ரிப்ளை!!!!!!

கேரளாவில் பாஜகவின் அழைப்பை நடிகர் மோகன்லால் ஏற்க மறுத்துவிட்டார்.
 
சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜவில் இணைந்தனர், அப்போது தமிழிசை அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தாமரையை மலர அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும் எனவும், பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
தம்மை சுற்றி அரசியல் வலை பிண்ணப்படுவதை உணர்ந்த அஜித் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்  தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன்.  நான் சினிமாவில் நடிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். மாறாக அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை என அதிரடியாக தெரிவித்தார்.
 
இதைப்போலவே கேரளாவில் பாஜக சார்பில் நடிகர் மோகன்லால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிறார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
 
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோகன்லால் அளித்த பேட்டியில் எனக்கு அரசியல் தெரியாது. நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். அதுவே என் பணி. அரசியலுக்கு வர விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என கூறினார்.