செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 மே 2021 (18:58 IST)

கேரளா முன்மாதிரியாக இருக்கட்டும்… பாஜக ஆதரவு நடிகர் வாழ்த்து!

கேரளாவில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பினராயி விஜயனுக்கு மோகன்லால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஆட்சியை தக்கவைத்துள்ள இடது கூட்டணியின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்க உள்ளார். முந்தைய அமைச்சரவையில் இருந்த யாருமே தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. பினராயி விஜயனைத் தவிர. இந்நிலையில் இன்று எளிமையான முறையில் பினராயி விஜயனும் மற்ற 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் சமூகவலைதளத்தில் ‘பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எல்லா வாழ்த்துகளும். கேரளா தொடர்ந்து உலகிற்கு முன் மாதிரியாக இருக்கட்டும்’ என வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மெட்ரோ ஸ்ரீதரனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.